6 ஆண்டுகளுக்கு பிறகு கன்னட படத்தில் பிரியங்கா மோகன்…நாளை வெளியாகும் பர்ஸ்ட் லுக்|priyankaamohan first look on 27th Dec 2025 at 11:11AM

சென்னை,
6 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்பை திரில்லரான ’666 ஆபரேஷன் டிரீம் தியேட்டர்’ என்ற கன்னட படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிப்புக்கு பெயர் பெற்ற நடிகை பிரியங்கா மோகன், ஹேமந்த் எம் ராவ் இயக்கும் ’666 ஆபரேஷன் டிரீம் தியேட்டர்’ தியேட்டர்’படத்தில் சிவராஜ்குமார் மற்றும் டாலி தனஞ்சயாவுடன் நடிக்கிறார். அவரது பர்ஸ்ட் லுக் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாக உள்ளது.
பிரியங்கா கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான ‘ஓந்த் கதே ஹெல்லா’ மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.






