பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திரைப்பட இயக்குநர் குஞ்சு முகமது கைது

திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 30-வது சர்வதேச கேரள திரைப்பட விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், இயக்குனருமான பி.டி.குஞ்சு முகமது பங்கேற்றார். மேலும் திரைப்படத்துறையை சேர்ந்த பல்வேறு இயக்குனர்கள் மற்றும் கேரள சினிமா அக்காடமியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் குஞ்சு முகமது நடந்து கொண்டதாக பெண் இயக்குனர் ஒருவர் முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார், குஞ்சு முகமது மீது வழக்குப்பதிவு கைது செய்தனர்.
முன்னதாக குஞ்சு முகமது நீதிமன்றத்தில் இருந்து முன்ஜாமீன் பெற்றிருந்ததால், செவ்வாய்க்கிழமை அன்று (நேற்று) கேன்டன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளிடம் முகமது ஆஜரானதாகவும், அவரது கைது முறையாகப் பதிவு செய்யப்பட்ட பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.






