தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளுக்காக எதையும் செய்ய தயார் – நடிகை தீவ்ரா ஹரன் | Ready to do anything for stories that make an impact

சென்னை,
கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் ரெட்ட தல. இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நாளை வெளியாக உள்ளது.
அருண் விஜய் நடித்துள்ள இந்தபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை தீவ்ரா ஹரன் அறிமுகமாகியுள்ளார். பெரிய அளவில் பேசப்படும் இவரது நடிப்பின் காரணமாக அடுத்தடுத்து படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
இதுகுறித்து பேசிய தீவ்ரா ஹரன், தன்னை “பக்கா தமிழ் பொண்ணு” என கூறியதுடன், சினிமாவை தியாகமாக அல்ல, முழு அர்ப்பணிப்புடன் மேற்கொள்வதாக தெரிவித்தார். தாக்கம் ஏற்படுத்தும் கதைகளுக்காக எந்த உழைப்பையும் செய்ய தயாராக இருப்பதாகவும், தமிழில் இருந்து கனவுக் கன்னிகள் உருவாக வேண்டும் என்பதே தனது இலக்கு எனவும் கூறியுள்ளார்.






