நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம்.. ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?”- நடிகர் சிவராஜ்குமார் | “You can do good while being an actor… Why should one enter politics?

நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம்.. ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?”- நடிகர் சிவராஜ்குமார் | “You can do good while being an actor… Why should one enter politics?


சென்னை,

கன்னட திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆன சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘45 தி மூவி’. இந்த படத்தில் ராஜ் பி செட்டி, உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை அர்ஜுன் ஜன்யா படத்தை இயக்கியிருக்கிறார். பேண்டசி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 25ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தின் ரிலீஸையொட்டி படக்குழுவினருடன் நடிகர் சிவராஜ்குமார் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவராஜ்குமாரிடம், செய்தியாளர் ஒருவர் தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து நட்சத்திர நடிகர்கள் விஜய்காந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்டோர் அரசியலுக்கு போகிறார்கள். அதே போன்று கர்நாடகாவில் உபேந்திரா சார், ராஜ்குமார் சார், நீங்கள் (சிவராஜ்குமார்) உள்பட யாருமே அரசியலுக்கு செல்வதில்லை என்ன காரணம் என்று கேள்வி கேட்டார். அதற்கு, சிவராஜ்குமார் வெளிப்படையான பதில் அளித்துள்ளார். அதாவது, “மக்களுக்கு நல்லது செய்ய நடிகர்களுக்கு, அதிகாரம் அவசியமில்லை. நடிகராக இருந்து கொண்ட நல்லது செய்யலாமே, ஏன் அரசியலுக்கு வரவேண்டும்” என்று பதிலளித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *