’டி54’ படப்பிடிப்பு நிறைவு…கேக் வெட்டி கொண்டாடிய தனுஷ், மமிதா பைஜு|Dhanush & MamithaBaiju celebrating the D54 wrap on the sets, directed by VigneshRaja

சென்னை,
‘போர் தொழில்’ பட இயக்குனர் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘டி54’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.
இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், விக்னேஷ் ராஜா இயக்கிய டி54 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை தனுஷ் மற்றும் மமிதா பைஜு படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






