Post Office RD திட்டத்தில் தினமும் ரூ.33 முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

Post Office RD திட்டத்தில் தினமும் ரூ.33 முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?


Post Office RD திட்டத்தில் தினமும் ரூ.33 முதலீடு செய்தால் 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை பார்க்கலாம்.



Post Office Recurring Deposit



தபால் நிலையத்தின் திட்டங்களில் சிறந்த வருமானத்தை தரும் திட்டங்களில் ஒன்று தான் ரெக்கரிங் டெபாசிட் (Post Office Recurring Deposit) சேமிப்பு திட்டம்.


இந்த திட்டத்தில் நீங்கள் மிக குறைந்த தொகையில் இருந்தே சேமிப்பை தொடங்கலாம். முக்கியமாக, இந்த திட்டத்தில் உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும்.


இந்த திட்டத்தில் ரூ.100 மற்றும் அதற்கு மேல் (ரூ. 10 இன் மடங்குகளில்) மாதாந்திர முதலீடுகளை செலுத்தலாம்.

Recurring Deposit கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும்.

Post Office RD திட்டத்தில் தினமும் ரூ.33 முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? | Invest33 Daily In Post Office Rd Get Back After5Yr

ஒவ்வொரு காலாண்டு முடியும் போது கூட்டு வட்டியுடன் உங்களது கணக்கில் சேர்க்கப்படும். இந்த திட்டத்தில் 6.7% வட்டி (Interest) வழங்கப்படுகிறது.

குறிப்பாக இந்த திட்டத்தில் ஓராண்டுக்குப் பிறகு கடன் பெறலாம்.

நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையில் 50 சதவீதம் கடனாக வழங்கப்படுகிறது. அதனை தவணையாகவோ அல்லது ஒரே நேரத்திலோ செலுத்தலாம். வட்டி விகிதம் RD வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் அதிகம் ஆகும்.



ரூ.33 முதலீடு



Post Office Recurring Deposit திட்டத்தில் தினமும் ரூ.33 முதலீடு செய்ய வேண்டும். அதாவது மாதம் தோறும் ரூ.1000 முதலீடு செய்ய வேண்டும்.

அதன்படி, 5 ஆண்டுகளுக்கு மொத்த வைப்புத்தொகை ரூ.60,000 ஆகவும், பெறப்பட்ட வட்டி ரூ.11,369 ஆகவும் இருக்கும். இதன்படி, உங்கள் மொத்த முதிர்வுத் தொகை ரூ.71,369 ஆக கிடைக்கும்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *