விஜய் தேவரகொண்டாவின் 15-வது படம்…டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிப்பு|Vijay Deverakonda’s new film… title and release date announced

சென்னை,
ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டாவின் 15-வது படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வருகிற 22 ஆம் தேதி மாலை 7:29 மணிக்கு வெளியாக உள்ளது. தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
ஜோடியாக இதுவரை இருவரும் நடித்திருக்காதநிலையில், இவர்களின் கெமிஸ்ட்ரி படத்தில் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். விஜய் தேவரகொண்டாவின் படங்கள் சில காலமாக பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறவில்லை.
சமீபத்திய படங்களான ‘பேமிலி ஸ்டார்’ மற்றும் ‘தி கிங்டம்’ எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இப்படம் அவருக்கு கைக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






