அனஸ்வராவின் ’சாம்பியன்’ பட டிரெய்லர் வெளியீடு

சென்னை,
மகாநதி, சீதா ராமம் போன்ற கிளாசிக் படங்களை தயாரித்த ஸ்வப்னா சினிமா தற்போது ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் நடிப்பில் ’சாம்பியன்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது.
இதில் , கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா நடித்திருக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் சந்திரகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் பிரதீப் அத்வைதம் இயக்கும் இப்படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற 25-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.






