தாய்க்கு கொடுத்த வாக்குறுதி.. லட்சக்கணக்கான மரங்களை நட்டு வரும் வில்லன் நடிகர்

‘பாரதி’ என்ற படத்தில் சுப்பிரமணிய பாரதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே. தொடர்ந்து வில்லன் கதாபாத்தி ரத்தில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.
சினிமா மட்டுமின்றி இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மீது அதிக ஆர்வம் கொண்டவர் சாயாஜி ஷிண்டே. அவரது தாயார் இறப்பதற்கு முன்பு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு இறந்திருக்கிறார். அதனை தாங்கி கொள்ள முடியாத சாயாஜிஷிண்டே மரம் நட்டால் ஆக்சிஜன் கிடைக்கும் என்பதை மையமாக கொண்டு தன் தாய்க்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறார்.
மரம் நடுவதற்கென தனி அமைப்பை தொடங்கி அந்த அமைப்பின் மூலம் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வருகிறார். தனது தாய்க்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக லட்சக்கணக்கான மரங்களை நட்டு இருக்கிறார் சாயாஜிஷிண்டே. இந்த திட்டத்தால் பள்ளிக் குழந்தைகளை பசுமை முயற்சியில் அதிகமாக சாயாஜிஷிண்டே ஈடுபடுத்தி வருகிறார்.






