ஸ்ரீலீலாவை தொடர்ந்து ஏஐ எடிட்டுக்கு எதிராக கொந்தளித்த நிவேதா தாமஸ்|Following Sreeleela, Nivetha Thomas also lashed out against AI editing

சென்னை,
சமீப காலமாக, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி சிலர் நடிகைகளை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். பல கதாநாயகிகள் ஏற்கனவே அவற்றைப் பற்றிப் பேசியுள்ளனர்.
சமீபத்தில் கையெடுத்துக் கும்பிட்டு கேட்கிறேன், இது போன்ற ஏஐ முட்டாள் தனமான எடிட் எல்லாம் பண்ணாதீங்க என நடிகை ஸ்ரீலீலா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஒவ்வொரு பெண்ணும் ஒருத்தரின் பேத்தியாகவோ, மகளாகவோ, அக்கா, தங்கையாகவோ, தோழியாகவோ இருப்பார்கள். ஏன் இப்படி பண்றீங்க என கூறி இருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீலீலாவை தொடர்ந்து நடிகை நிவேதா தாமஸும் தற்போது ஏஐ ஆபாச எடிட்டுகளுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். ’சமீபத்தில் நான் பகிர்ந்திருந்த புகைப்படத்தை ஏஐ மூலம் ஆபாசமாக எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். உடனடியாக அதை எல்லாம் நீக்கவில்லை என்றால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என நடிகை நிவேதா தாமஸ் எச்சரித்துள்ளார்.
முன்னதாக ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப், ஆலியா பட், கஜோல், சாய் பல்லவி, பிரியங்கா மோகன் போன்ற பல நட்சத்திர கதாநாயகிகள் டீப் பேக் வீடியோக்களால் பாதிக்கப்பட்டளனர். இந்த பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.






