’கை எடுத்து கும்பிட்டு கேட்கிறேன், அப்படியெல்லாம் பண்ணாதீங்க’…- வைரலாகும் ஸ்ரீலீலாவின் பதிவு

’கை எடுத்து கும்பிட்டு கேட்கிறேன், அப்படியெல்லாம் பண்ணாதீங்க’…- வைரலாகும் ஸ்ரீலீலாவின் பதிவு


சென்னை,

தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதற்கு பதிலாக மன அமைதியைப் பறித்து வாழ்க்கையை மேலும் சிக்கலாக்குவதாக ஸ்ரீலீலா பதிவிட்டுள்ளார்.

சமீப காலமாக, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சிலர் நடிகைகளை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர். பல கதாநாயகிகள் ஏற்கனவே அவற்றைப் பற்றிப் பேசியுள்ளனர். சமீபத்தில், நடிகை ஸ்ரீலீலாவும் இதற்கு பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒவ்வொரு சமூக ஊடக பயனரையும் கைக்கூப்பி கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து இதுபோன்ற முட்டாள்தனமான எடிட்டை ஊக்குவிக்க வேண்டாம்.. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் அதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. தொழில்நுட்பம் நமது சுயமரியாதையை சேதப்படுத்தும் ஆயுதமாக மாறக்கூடாது’ என்று ஸ்ரீலீலா ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில், ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப், ஆலியா பட், கஜோல், சய் பல்லவி, பிரியங்கா மோகன் போன்ற பல நட்சத்திர கதாநாயகிகள் டீப் பேக் வீடியோக்களால் பாதிக்கப்பட்டளனர். இந்த பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *