’அகண்டா 2′ படத்தில் சிவனாக நடித்தவர்… இந்தியில் மிகவும் பிரபலம் – யார் அவர் தெரியுமா?|Lord Shiva: This is Lord Shiva in ‘Akhanda 2’

’அகண்டா 2′ படத்தில் சிவனாக நடித்தவர்… இந்தியில் மிகவும் பிரபலம் – யார் அவர் தெரியுமா?|Lord Shiva: This is Lord Shiva in ‘Akhanda 2’


சென்னை,

நந்தமுரி பாலகிருஷ்ணாவின் சமீபத்திய படம் அகண்டா 2: தாண்டவம். இது 2021 இல் வெளிவந்த பிளாக்பஸ்டர் படமான அகண்டாவின் தொடர்ச்சியாகும். முதல் படத்தை இயக்கிய போயபதி சீனு, அகண்டா 2 ஐயும் இயக்கியுள்ளார்.

கடந்த 12 அன்று உலகம் முழுவதும் வெளியான அகண்டா 2 திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. முதல் நாளில், ரூ. 60 கோடிக்கு மேல் வசூலித்த அகண்டா 2 திரைப்படம், பாலய்யாவின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்தார். பஜ்ரங்கி பைஜான் குழந்தை நட்சத்திரம் ஹர்ஷாலி மல்ஹோத்ரா பாலய்யாவின் மகளாக ஒரு அற்புதமான வேடத்தில் நடித்தார்.

மேலும், ஆதி பினிசெட்டி, கபீர் துல்ஹன் சிங், சாஸ்வதா சட்டர்ஜி, அச்யுத் குமார், பூர்ணா, ஹர்ஷா, ஜெகபதி பாபு, ராச்சா ரவி, ஐயப்பா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இருப்பினும், இந்த படத்தில் சிவனின் வேடம் சிறப்பம்சமாக இருந்தது. படத்தில் சிவனின் வேடம் சிறிது நேரம் மட்டுமே காணப்பட்டது, ஆனால் அது பார்வையாளர்களை திகைக்க வைத்தது. இதனையடுத்து, சிவனாக நடித்த நடிகர் யார் என்று மக்கள் யோசித்துக்கொண்டிருக்கும்நிலையில், அது பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அகண்டா 2 படத்தில் சிவன் வேடத்தில் நடித்த நடிகரின் பெயர் தருண் கன்னா. அவருக்கு முன்பு சிவபெருமானாக நடித்த அனுபவம் உள்ளது. தருண் கன்னா முதன்முதலில் ‘சந்தோஷி மா’ (2015 – 17) என்ற புராண தொலைக்காட்சி தொடரில் சிவனாக நடித்தார். அதன் பிறகு, தருண் கன்னா ‘கர்மபல் ததா சனி’, ‘பரமாவதர் ஸ்ரீ கிருஷ்ணா’ முதல் ‘ஸ்ரீமத் ராமாயணம்’ மற்றும் இப்போது ‘கால் பைரவ ரக்சக் சக்திபீத் கே’ வரை பல தொலைக்காட்சி தொடர்களில் சிவனாக நடித்திருக்கிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *