“பராசக்தி” படத்தின் “நமக்கான காலம்” பாடல் வெளியானது

“பராசக்தி” படத்தின் “நமக்கான காலம்” பாடல் வெளியானது


சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இப்படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. முதல் பாடலான ‘அடி அலையே’ , 2வது பாடலான ‘ரத்னமாலா’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் 3-வது பாடலான. ‘நமக்கான காலம்’ வெளியாகியுள்ளது. இப்பாடலை கல்யாண் வரிகளில் ஹரிசரண், நகாஷ் அஜீஸ், வேல்முருகன் ஆகியோர் பாடியுள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *