ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?… சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ

சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே, சன் டிவியில் தொடர் ஆரம்பித்த நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சீரியல்.
கடந்த 2003ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் 640 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மனீஷா, அமல்ஜித், தர்ஷக் கௌடா என பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்போது கதையில் ஆனந்தி கர்ப்பத்திற்கு யார் காரணம் என்ற கதைக்களம் தான் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஏற்காடு சென்றுள்ள ஆனந்தி அன்புவுடன் சில அழகான தருணங்களை அனுபவித்து வருகிறார்.
புரொமோ
தற்போது இந்த வார எபிசோட் புரொமோவில், ஆனந்தி-அன்புவை சேர்க்க மகேஷ் அவர்களை ஏற்காடு அனுப்ப பிளான் செய்து அவரும் சென்றுள்ளார்.
4 ஜோடிகள் ஏற்காடு சென்றுள்ளனர், அதேபோல் வில்லி வேலை செய்ய துளசியும் ஏற்காடு சென்றுள்ளார். அங்கு சென்றவர் ஆனந்தியை நடுக்கடலில் தண்ணீரில் தள்ளிவிட முயற்சி செய்கிறார்.
ஆனந்தி தண்ணீரில் விழுந்துவிடுவாரா, அன்பு காப்பாற்றுவாரா என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் காண்போம்.






