Director Rathna Kumar’s new film title update

Director Rathna Kumar’s new film title update


2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்ன குமார். இதன்பின் இவர் ‘ஆடை’, ‘குலுகுலு’ போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.

இதனை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ஜி-ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார். இப்படம் தொடர்பான எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில், சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த நிலையில், ரத்னகுமார் இயக்கி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நாளை மதியம் 1.29 மணிக்கு வெளியாகும் என ஜி-ஸ்குவாட் அறிவித்துள்ளது.

‘லியோ’ வெற்றி விழாவில் இயக்குநர் ரத்னகுமார், ரஜினி குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *