படையப்பா என் கதை, நானே தயாரித்தேன், ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுத்தார்! – பல ரகசியங்களை போட்டுடைத்த ரஜினி

படையப்பா என் கதை, நானே தயாரித்தேன், ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுத்தார்! – பல ரகசியங்களை போட்டுடைத்த ரஜினி


படையப்பா படத்தை பற்றிய பல ரகசியங்களை ரஜினி தற்போது கூறி இருக்கிறார். வரும் டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷலாக படையப்பா ரீரிலீஸ் ஆகிறது. அது பற்றி தற்போது ரஜினி பேட்டி அளித்திருக்கிறார்.

படையப்பா படத்தின் மூலக்கதை என்னுடையது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் நந்தினி கதாபாத்திரத்தை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்படி யோசித்தது தான் படையப்பா கதை.

நானே தயாரித்தேன்

இந்த படத்தை நானே தான் தயாரித்தேன். நண்பரின் பெயரை போட்டிருந்தாலும் அதை தயாரித்தது நான் தான்.

படையப்பாவின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை என எதையும் நான் இதுவரை விற்கவில்லை.

படையப்பா என் கதை, நானே தயாரித்தேன், ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுத்தார்! - பல ரகசியங்களை போட்டுடைத்த ரஜினி | Rajinikanth Reveals Padayappa Own Story Production

ஜெயலலிதா – நீலாம்பரி

“ஜெயலலிதாவை வைத்து தான் நீலாம்பரி கதாபாத்திரம் எழுதப்பட்டதாக அப்போது வதந்தி பரப்பினார்கள். படையப்பா ரிலீஸ் ஆனபோது ஜெயலலிதாவே படம் பார்க்க வேண்டும் என சொன்னார். போயஸ் கார்டன் தியேட்டரில் அவர் படம் பார்த்து பிடித்து இருந்தது என சொன்னதாக நான் கேள்விப்பட்டேன்” என ரஜினி கூறி இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்

முதலில் நீலாம்பரி ரோலில் ஐஸ்வர்யா ராய் தான் சரியாக இருப்பார் என நான் நினைத்தேன். அவருக்காக 3-4 மாசம் சுற்றினோம். நடிக்கிறேன் என அவர் சொல்லவில்லை. பண்றேன் என உறுதியாக சொல்லி இருந்தால் ஒன்று அல்லது இரண்டு வருடம் கூட காத்திருந்திருப்பேன்.


ஐஸ்வர்யா ராய்க்கு நடிக்க விருப்பம் இல்லை என்றதும் ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித் போன்ற பல பெயர்கள் சொன்னார்கள். ஆனால் அவர்களிடம் அந்த லுக் இல்லை, ஒரு திமிர், ஆணவம் அவர்களிடம் தெரியவில்லை. அதன் பிறகு தான் ரம்யா கிருஷ்ணன் பெயரை கேஎஸ் ரவிகுமார் சொன்னார்.

“ஆரம்பத்தில் எனக்கு சரி என தோன்றவில்லை. ரம்யா கிருஷ்ணன் இன்னும் கொஞ்சம் எடை அதிகரித்தால் நிச்சயம் செட் ஆகும் என இயக்குனர் கூறினார். நீங்கள் உறுதியாக இருந்தால் ஓகே என கூறிவிட்டேன்” எனவும் ரஜினி கூறி இருக்கிறார்.
 

படையப்பா என் கதை, நானே தயாரித்தேன், ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுத்தார்! - பல ரகசியங்களை போட்டுடைத்த ரஜினி | Rajinikanth Reveals Padayappa Own Story Production


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *