விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை|Divya Khosla shuts down divorce buzz with Bhushan Kumar

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை|Divya Khosla shuts down divorce buzz with Bhushan Kumar


சென்னை,

நடிகை திவ்யா கோஸ்லா தன்னை சுற்றி பரவி வரும் விவாகரத்து வதந்திகளை பற்றிப் பேசினார். சமீபத்தில், இவர் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை விஷயங்கள் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர் கூறினார்.

இதன் ஒரு பகுதியாக, அவர் விவாகரத்து கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், “விவாகரத்து செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. ஆனால், ஊடகங்கள் அப்படி இருக்க விரும்புகின்றன,” என்று தெரிவித்தார். இதன் மூலம் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

திவ்யாவுக்கும் பூஷன் குமாருக்கும் கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் திவ்யா தனது சமூக ஊடகப் பெயரிலிருந்து “குமார்” என்பதை நீக்கிய பிறகு அவர்களது விவாகரத்து குறித்த வதந்திகள் எழ ஆரம்பித்தன.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *