சமந்தாவின் திருமண கேள்விகளை தவிர்க்கும் நாக சைதன்யா

சமந்தாவின் திருமண கேள்விகளை தவிர்க்கும் நாக சைதன்யா


நடிகை சமந்தாவுக்கும், நடிகர் நாக சைதன்யாவுக்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டால் 2021-ம் ஆண்டில் பிரிந்தனர். பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து மீண்டும் சினிமாவுக்கு வந்த சமந்தாவும், இயக்குனர் ராஜ் நிடிமொருவும் காதலித்து வந்தனர். சமீபத்தில் கோவையில் இவர்களது திருமணம் ரகசியமாக நடந்தது. நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா கடந்த ஆண்டு 2வது திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையில் நாக சைதன்யாவை வெறுப்பேற்றும் விதமாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். நாக சைதன்யா செல்லும் இடங்களிலும் சமந்தாவை வாழ்த்தி கோஷமிடுகிறார்கள்.

இதனால் நாக சைதன்யா கடுப்பில் இருக்கிறாராம். போகுமிடங்களிலும் சமந்தா பற்றி கேள்விகள் கேட்கக்கூடாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொல்லி விடுகிறாராம். சமந்தாவின் 2-வது திருமணம் நாக சைதன்யாவை மனதளவில் பாதித்து விட்டதாக தெரிகிறது.

“தி பேமிலி மேன்” வெப் தொடரின் இரண்டாவது சீசனில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். அப்போதுதான் சமந்தாவுக்கும், ராஜுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. ராஜ் நிதிமோருவும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *