30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் அடூர் – மம்முட்டி கூட்டணி

30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் அடூர் – மம்முட்டி கூட்டணி


வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் மம்முட்டி, தற்போது பேட்ரியாட் எனும் அரசியல் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மம்முட்டியை வைத்து அடுத்த படம் எடுக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார். மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய ‘அனந்தரம்’, ‘மதிலுகள்’, ‘விதேயன்’ ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அடூர் கோபாலகிருஷ்ணன் – மம்முட்டி கூட்டணி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதனை அடூர் கோபாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் அடூர் கோபாலகிருஷ்ணன், “என்னுடைய அடுத்தப் படத்தில் மம்முட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நபர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கதை எழுதும்போது முதன்மை கதாபாத்திரத்திற்கு என் மனதில் மம்முட்டி முகமே தோன்றியது. அந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியானத் தேர்வு என்று நான் உணர்ந்தேன். என்னுடைய திரைப்படத்தில் நான்காவது முறையாக நடிக்கிறார்.நான் இதுவரை மற்ற நடிகர்களுடன் இவ்வளவு முறை பணியாற்றியதில்லை” என்று கூறியிருக்கிறார்.

அடூர் கோபாலகிருஷ்ணன் – மம்முட்டி கூட்டணி திரைப்படங்களுக்கு கேரளத்தில் நல்ல வரவேற்பு இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *