மாதவனின் “ஜி.டி.என்” படத்தின் படப்பிடிப்பு அப்டேட்

மாதவனின் “ஜி.டி.என்” படத்தின் படப்பிடிப்பு அப்டேட்


நிஜ வாழ்க்கையில் ஏதோ ஒரு துறையில் சாதனை செய்தவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் அவ்வப்போது உருவாகி வருகிறது. அந்த வகையில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தை ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ என்ற பெயரில் மாதவன் இயக்கி நடித்திருந்தார். இப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரித்த இப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.

எந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்த மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் மாதவன் நடித்து வருகிறார். இப்படத்தை ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ படத்தை தயாரித்திருந்த அதே தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதன்படி, இப்படத்திற்கு ‘ஜி.டி.என்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் யோகி பாபு, ஜெயராம், பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.டி. நாயுடுவின் பிறந்த இடமான கோயம்புத்தூரில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ‘ஓஹோ எந்தன் பேபி’ பட இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், ‘ஜி.டி.என்’ படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பை தடையின்றி முடித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Varghese Moolans Pictures (@varghesemoolans_pictures)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *