மூன்றே நாட்களில்…வசூலில் அரை சதம் அடித்த தனுஷின் `தேரே இஷ்க் மே’

மூன்றே நாட்களில்…வசூலில் அரை சதம் அடித்த தனுஷின் `தேரே இஷ்க் மே’


சென்னை,

தனுஷ், கிரித்தி சனோன் நடித்த `தேரே இஷ்க் மே’படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. தனுஷ் – இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவான இப்படம் கடந்த 28ம் தேதி வெளியானது. ஆனந்த் எல் ராய், தனுஷின் முந்தைய பாலிவுட் படங்களான ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்த படத்தில் தனுஷின் நடிப்பிற்கு ரசிகர்களிடமும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. படத்தின் கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், `தேரே இஷ்க் மே’ படம் இந்தியில் மட்டும் 3 நாட்களில் ரூ.50.95 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். உலகளவில் இந்த படம் ரூ.100 கோடியை நெருங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *