மனைவியை கரம்பிடித்த காதலன்…12 ஆண்டு திருமண வாழ்க்கை – கணவர் செய்த செயல்!

மனைவியை கரம்பிடித்த காதலன்…12 ஆண்டு திருமண வாழ்க்கை – கணவர் செய்த செயல்!


கணவர்  ஒருவர்  தன்னுடைய மனைவியை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 திருமணம்

சினிமாவில் தான் காதலித்த பெண்ணை கரம்பிடிக்க பல்வேறு சாவல்களைச் சந்தித்து திருமணம் செய்து கொள்வர். இது போன்ற காட்சிகளைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் இது போன்ற சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

கணவர் தன்னுடைய மனைவியை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்த சம்பவம்

பீகார் மாநிலம், சஹர்சாவை சேர்ந்த நபர் ஒருவர் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.கடந்த 12 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவிக்கு வேறு ஒருவருடன் காதல் மலர்ந்துள்ளது. இது குறித்து மனைவி தனத் கணவரிடம் தெரிவித்துள்ளார்.

கணவர் செயல்

இதற்கு ஒப்புதல் அளித்தது மட்டுமல்லாமல், திருமண விழாவையும் முன்னின்று நடத்தியுள்ளார்.இதில் காதலனாக வரும் நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த திருமண வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

husband who arranged a marriage for his wife in bihar

இதற்கு நெட்டிசன்கள் பலரும் ஒரு சிலர் இது கலாச்சாரத்தைச் சீர் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு புறம் இதற்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *