ஹாலிவுட்டில் பணியாற்றுவது சுலபமில்லை- திரை உலக அனுபவத்தை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா | Working in Hollywood is not easy

ஹாலிவுட்டில் பணியாற்றுவது சுலபமில்லை- திரை உலக அனுபவத்தை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா | Working in Hollywood is not easy


இந்திய திரை உலகில் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பாடகரான நிக்ஜோனசை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு லாஸ் ஏஞ்சல்சில் வசித்து வருகிறார். இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் திரை உலகிலும் நடிக்க தொடங்கி சினிமா மற்றும் வெப் தொடர்களிலும் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஹாலிவுட் திரை உலக அனுபவம் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா பேசியதாவது:- சர்வதேச ரசிகர்களை பற்றி எனக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு மத்தியில் எப்படி வாழ்வது என்று எனக்கு தெரியவில்லை. ஹாலிவுட்டில் நுழைந்த போது யாரையும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் என் சொந்த பாதையை உருவாக்கினேன். படிப்படியாக நானே கற்றுக் கொண்டேன். யாருடைய அடிச்சுவடுகளையும் பின்பற்றவில்லை. சில நல்ல தவறுகள் கெட்ட தவறுகள் புதிதாக தொடங்கும் போது நடக்கும். எனக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு சவாலாக இருந்தது என் தோல்விகளை பார்ப்பது அல்ல. ஹாலிவுட்டில் பணியாற்றுவது சுலபமில்லை என்பதால் பல விஷயங்களை நான் திட்டமிட்டு செய்தேன். எனக்கு ஆதரவு கொடுக்காதவர்களைவிட கொடுத்தவர்கள் மிக குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.

பிரியங்கா சோப்ரா தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் வாரணாசி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *