Samantha Ruth Prabhu gets snapped with David Beckham; video goes viral

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். அவர் சமீப காலமாக, உடல்நிலை காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட நிலையில், மீண்டும் தற்போது அவர் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது போன்ற விஷயங்களையும் சமந்தா செய்து வருகிறார்.
இந்தியா வந்திருக்கும் கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் நடிகர் தனுஷ், நடிகை சமந்தாவை சந்தித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளன. மெட்டா ஏஐ நடத்திய மும்பை நிகழ்ச்சியில் சமந்தா உடன் டேவிட் பெக்கம் கலந்துரையாடல் நடத்தினார்.
யுனிசெப் நல்லெண்ண தூதராக இருக்கும் டேவிட் பெக்கம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக வந்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட், இங்கிலாந்தின் முன்னாள் வீரரும் இன்டர் மியாமின் தற்போதைய இணை நிறுவனருமான டேவிட் பெக்கம் இந்தியாவின் யுனிசெப் அமைப்பில் உள்ள குழந்தைகளைச் சந்தித்தார்.
இன்னொரு நிகழ்வில் நடிகர் தனுஷையும் பெக்கம் சந்தித்து பேசினார். பலரும் இவரிடம் கையெழுத்துகளையும் புகைப்படங்களயும் வாங்கினார்கள்.
மும்பை நிகழ்வில் டேவிட் பெக்கம் “இந்தியாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோதே மிகவும் பிரமித்துபோனேன். இந்திய மக்கள், சூழ்நிலை, கலாசாரம், உணவு எல்லாமே பிடித்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ரசிகர்களைப் போல உலகில் பல இடங்களில் இருப்பதில்லை ” என்றார்.






