காலையில் தோசை மென்மையாக செய்யணுமா?இதை அரை கப் சேருங்க

காலையில் தோசை மென்மையாக செய்யணுமா?இதை அரை கப் சேருங்க

தோசை என்பது இந்தியர்கள் பாரம்பரியதாக செய்யும் ஒரு உணவாகும். இதில் பல தானியங்களை அரைத்து மாவாக்கி செய்வது வழக்கம். அரிசி மாவு மற்றுத் உழுந்து மாவு தான் தோசைக்கு அதிகம் பயன்படுத்துவார்கள்.

இந்த தோசையை இன்னும் ஆரோக்கியப்படுத்த இதில் சில பொருட்களை சேர்ப்பது வழக்கம். அந்த வகையில் தோசை மாவில் கம்பு மாவை சேர்த்து கம்பு தோசையாக மாற்றி சாப்பிடுவது ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்.

இந்த கம்பு தோசை எடையைக் குறைப்பது, எலும்புகளை வலுப்படுத்துவது போன்ற பல நன்மைகளை அளிக்கிறது.

இது தவிர தோசை மிகவும் மென்மையாகவும் மொருமொருப்பாகவும் இருக்கும். இந்த பதிவில் அந்த ஆரோக்கிய தோசை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

காலையில் தோசை மென்மையாக செய்யணுமா?இதை அரை கப் சேருங்க | Kambu Dosa Recipe How To Prepare Kambu Dosa

தேவையானப் பொருட்கள்

  • கம்பு மாவு – அரை கப்
  • தோசை மாவு – 1 கப்
  • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
  • நறுக்கிய கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
  • நறுக்கிய பச்சை மிளகாய் – 1
  • துருவிய இஞ்சி – 1 ஸ்பூன்
  • நெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – கால் கப்

செய்யும் முறை

முதலில் நன்கு புளித்த தோசை மாவில் அரை கப் கம்பு மாவை கலக்கவும். பின்னர் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

மாவு நல்ல பதத்திற்கு வந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

காலையில் தோசை மென்மையாக செய்யணுமா?இதை அரை கப் சேருங்க | Kambu Dosa Recipe How To Prepare Kambu Dosa


இந்த மாவை கட்டிகள் இல்லாமல் கரைத்துத்துக்கொள்ள வேண்டும். தோசையாக இந்த மாவை ஊற்றிகால் அனைத்து இடங்களிலும் பரவும் வகையில் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதன் பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் நன்கு சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றவும்.

நெய்யை முழுவதும் பரப்பிவிட்டு அதில் ஒரு கரண்டி மாவை ரவா தோசை போல மெலிதாக ஊற்றவும்.

காலையில் தோசை மென்மையாக செய்யணுமா?இதை அரை கப் சேருங்க | Kambu Dosa Recipe How To Prepare Kambu Dosa


அதன்பின் தோசையை மூடிவைத்து வேகவிடவும்.

நன்கு முறுகலாக வெந்ததும் தோசையை தட்டிற்கு மாற்றவும்.

இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான கம்பு தோசைக்கு சட்னி சாம்பார் வைத்து சாப்பிடலாம். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *