முத்தக்காட்சியில் நடிப்பது பற்றி மனம் திறந்த நடிகை கிரிஜா ஓக்|Actress Girija Oak opens up about acting in a kissing scene

முத்தக்காட்சியில் நடிப்பது பற்றி மனம் திறந்த நடிகை கிரிஜா ஓக்|Actress Girija Oak opens up about acting in a kissing scene


சென்னை,

ஷாருக்கானின் ‘ஜவான்’ மற்றும் அமீர் கானின் ‘தாரே ஜமீன் பர்’ போன்ற படங்களில் நடித்து அங்கீகாரம் பெற்ற நடிகை கிரிஜா, சமீபத்தில் அளித்த பேட்டி வைரலாகி, திடீரென தேசிய அளவில் பிரபலமானார். இந்நிலையில், படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ஒரு நேர்காணலில், கிரிஜாவிடம், முத்தக்காட்சியில் நடிக்க மனதளவில் எப்படி தன்னை தயார்படுத்திக் கொள்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், “இதே கேள்வியை பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். எனது பதில் ஒன்றுதான், அது ஒரு துண்டு காகிதத்தை முத்தமிடுவது போன்றது. எந்த உணர்ச்சியும் இருக்காது. சில நேரங்களில் நெருக்கமான காட்சியை எடுக்கும்போது, ​​முன்னால் ஒரு கலைஞர் கூட இருக்கமாட்டார்கள். கேமரா ஸ்டாண்டைப் பார்த்து, அல்லது லைட்டிங் செய்யப் பயன்படுத்தப்படும் கருப்புத் துணியை பார்த்துக்கொண்டு காதல் வசனங்களைச் சொல்ல வேண்டும். அப்படி பல முறை நான் பேசியிருக்கிறேன்,” என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *