‘மாஸ்க்’ படத்தில் போட்ட காசை எடுத்தால்.. அந்த படத்தை துணிந்து ரிலீஸ் செய்வேன் – ஆண்ட்ரியா | If I get the money I invested in the film ‘Mask’… I will boldly release that film

சென்னை,
முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, கவின் ஜோடியாக நடித்துள்ள ‘மாஸ்க்’ படம் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தை ஆண்ட்ரியாவும் இணைந்து தயாரித்துள்ளார்.
சென்னையில் நடந்த பட விழாவில் ஆண்ட்ரியா பேசுகையில், ‘‘நடிப்பு தாண்டி தயாரிப்பு தேவையா? உனக்கென்ன பைத்தியமா? என்றார்கள். சினிமா எனக்கு கொடுத்த காசை, மீண்டும் சினிமாவுக்கு கொடுக்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது?
சூப்பர் லேடி கதாபாத்திரங்கள் நடிக்க ஆசையா? என்கிறார்கள். நல்ல கதைகளை அப்படி எழுதினால் நடிக்க தயார் தான். முதலில் கதை எழுதட்டும். அப்புறம் பார்க்கலாம். நான் நடித்த ‘பிசாசு-2′, ‘மனுஷி’ படங்கள் வெளியாகவில்லை. இதில் ‘பிசாசு-2′ படம் வெளியாகாதது எனக்கு பெரும் வருத்தம். ‘மாஸ்க்’ படத்தில் போட்ட காசை எடுத்தேன் என்றால், ‘பிசாசு-2′ படத்தை நானே துணிந்து ரிலீஸ் செய்வேன்.
மலையாள சினிமாவில் நல்ல கதாபாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. எனக்கு மலையாளம் மொழி நன்றாக தெரிந்திருந்தால் நான் அங்கு போய் செட்டில் ஆகி இருப்பேன் ஏனென்றால் அவர்கள் சிறப்பான கதாபாத்திரத்தை எழுதுகிறார்கள். ஏ.ஐ. தொழில்நுட்பம் நடிகர்களுக்கு மட்டும் பிரச்சினை அல்ல, பொதுமக்களுக்கும் பிரச்சினையாகி விட்டது”, என்றார்.






