Actor Sarathkumar wants to direct a film starring Raadhika Sarathkumar | ராதிகா நடிக்கும் படத்தை இயக்க ஆசை

Actor Sarathkumar wants to direct a film starring Raadhika Sarathkumar | ராதிகா நடிக்கும் படத்தை இயக்க ஆசை


சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம் பொருள்’ ஆகிய திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன. இவர் கடந்த மாதம் வெளியான ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அடுத்தடுத்து போலீஸ் கதாபாத்திரத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவரது 150-வது படத்தை இயக்குனர் ஷ்யாம் பர்வின் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ‘தி ஸ்மைல் மேன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மர்யான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சரத்குமார் இப்படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், அவரது ஞாபகம் அழிவதற்குள் அவர் ஒரு தொடர் கொலைகள் செய்த குற்றவாளியை பிடிக்க வேண்டும். இதை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. சமீபத்தில் ‘தி ஸ்மைல் மேன்’ படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சரத்குமார் பேசும் போது, “இந்தப் படம் 10 ஆயிரம் கோடி வசூலிக்கும் என்று சொல்ல மாட்டேன். இது கிரைம் கதை. இப்போது கிரைம் திரில்லர் கதைகளைப் பார்க்க அதிகமானவர்கள் ஆசைப்படுகிறார்கள். இந்தப் படத்துக்கு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளோம். அதற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம். போலீஸ் கதைகளில் நிறைய நடித்துவிட்டேன். இதில் நினைவுகளை மறந்து விடுகிற அதிகாரியாக நடித்திருக்கிறேன். அவரால் ஒரு வழக்கைச் சரியாக முடிக்க முடியுமா, இல்லையா? என்று கதை செல்லும். என் மனைவி ராதிகா சிறந்த நடிகை. அவர் நடிப்பில் அவருக்குத் தேசிய விருது கிடைக்கும் வகையில் ஒரு படத்தை இயக்கும் ஆசை இருக்கிறது. அது நிறைவேறும் என்று நினைக்கிறேன். அதற்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

இப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *