“Kumki 2” is a travel story – Director Prabhu Solomon | “கும்கி 2” படம் பயணம் தொடர்பான கதை

சென்னை,
நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’என்ற திரைப்படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியானது. 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது ‘கும்கி 2’ என்ற திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேற்று வெளியானது.
பிரபு சாலமன் – சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து ‘கும்கி 2’ படத்தில் பணிபுரிந்துள்ளது. இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. ‘கும்கி 2’ படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படம் மூலம் மதியழகன் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் பிரபு சாலமன் “கும்கி படத்திற்கும், ‘கும்கி 2’ படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ‘கும்கி’என்பது ஒரு யானையின் டேக் தான். சிறு வயதில் இருந்து ஒருவனின் வாழ்வியலை கோர்வையாக எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அவனுக்கு இந்த சமூகத்தால், மனிதர்களால், அரசியலால் வரும் பிரச்னைகளைத் தாண்டி தன்னுடைய நட்பை எப்படி ஒருவன் காப்பாற்றி கொள்கிறான் என்பது தான் இதன் போக்கு. இந்தப் படத்தில் 100 சதவிகிதம் நட்பும், 0 சதவிகிதம் லவ் இருக்கும். இந்தப் படத்தில் கதாநாயகன், கதாநாயகி எல்லாம் இல்லை. இது முழுக்க முழுக்க பயணம் தொடர்பான கதை. நான் சமூக வலைதளங்கள் எதிலும் இல்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் செய்வேன்” என்று பேசியிருக்கிறார்.






