Aamir Khan and Ranbir Kapoor to team up for the second time?|இரண்டாவது முறையாக இணையும் அமீர்கான்

Aamir Khan and Ranbir Kapoor to team up for the second time?|இரண்டாவது முறையாக இணையும் அமீர்கான்


மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான். இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், ரன்பீர் கபூருடன் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அமீர்கானின் பாதுகாவலருடன் நடிகர் ரன்பீர் கபூர் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருப்பது இந்த தகவல் பரவ காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த புகைப்படம் வைரலானதையடுத்து, சிலர் இருவரும் இணைய உள்ளனர் என்றும், சிலர் சாதாரண சந்திப்பாக இருக்கலாம் என்றும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அவ்வாறு இருவரும் இணையும் பட்சத்தில் 2-வது முறையாக இருவரும் நடிக்கும் படமாக இது இருக்கும்.

இதற்கு முன்பு ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘பிகே’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இதில் ரன்பீர் கபூர் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. ஒருவேளை இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றால் அது நிச்சயம் பார்க்க சுவாரஸ்யமான இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *