’என்னுடைய கடின உழைப்பால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது’ – ஜோஷினா|’I got this opportunity because of my hard work’

’என்னுடைய கடின உழைப்பால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது’ – ஜோஷினா|’I got this opportunity because of my hard work’


சென்னை,

பரதநாட்டியம் மற்றும் நடனத்தில் பயிற்சி பெற்ற நடிகை ஜோஷினா, இப்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கும் மிடில் கிளாஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 21 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதில், அவர் ராதாரவியின் மகளாக நடித்திருக்கிறார். அதேபோல், வெற்றி மகாலிங்கம் இயக்கும் சூட்கேஸ் படத்திலும் , நடிகர் செம்மலர் அன்னம் இயக்கும் மற்றொரு படத்திலும் கதாநாயகியாக நடிக்கப் போவதாக ஜோஷினா கூறினார்.

இந்நிலையில், தன்னைப் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர் கூறினார். தன் குடும்பத்திற்கும் சினிமாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய அவர், சினிமா மீது ஆர்வும் ஏற்பட்டு இத்துறையில் நுழைந்ததாக தெரிவித்தார்.

அறிமுகம் வரை மட்டுமே அதிர்ஷ்டம் இருக்கும் எனவும், அதன பிறகு, நிலைத்து நிற்க, திறமை மற்றும் தொடர்ச்சியான உழைப்பு தேவை என்றும் ஜோஷினா கூறினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *