சிறு படகு புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க அதி நவீன ட்ரோன்களை களமிறக்கும் பிரித்தானியா

சிறு படகு புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க அதி நவீன ட்ரோன்களை களமிறக்கும் பிரித்தானியா


சிறு படகு புலம்பெயர் மக்களின் பின்னால் இருந்து இயங்கும் குழுக்களை அடையாளம் காணும் வகையில் அதி நவீன ட்ரோன்களை களமிறக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளது.

நிறுவனங்களின் உதவி


இதன்பொருட்டு பார்வைக்கு எட்டாத தொலைவு பறக்கும் போதும் உயர்தர காணொளிகளை பதிவு செய்யக்கூடிய கேஜெட்களை உள்விவகார அமைச்சக அதிகாரிகள் நாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறு படகு புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க அதி நவீன ட்ரோன்களை களமிறக்கும் பிரித்தானியா | Migrants Crossing Hi Tech Drones Used

மட்டுமின்றி, வழக்குத் தொடுக்கும் விதமாக புகைப்படங்களும் துல்லியமாக பதிவாக வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்டு வந்த ட்ரோன்கள், வெறும் கண்காணிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால் தற்போது தொழில்நுட்பத்தில் சிறந்துவிளங்கும் நிறுவனங்களின் உதவியை நாடவும் ஒப்பந்தம் மேற்கொள்ளவும் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

தண்டனை புத்தாண்டில்

இந்த ஒப்பந்தத்தில், மக்கள், வாகனங்கள் மற்றும் படகுகள் உட்பட இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து, அடையாளம் காணப்பட்டு, அந்த ட்ரோன் பதிவுகள் அனைத்தும் வழக்குத் தொடுக்க போதுமான ஆதாரமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு படகு புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க அதி நவீன ட்ரோன்களை களமிறக்கும் பிரித்தானியா | Migrants Crossing Hi Tech Drones Used

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 33,000 மக்கள் சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர். சட்டவிரோதமாக சிறு படகுகளில் புலம்பெயர் மக்களை அனுப்பும் செயல்களில் ஈடுபட்டு பலமுறை தோல்வி கண்ட மூவர் கடந்த மாதத்தில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டனர் .

இவர்கள் மூவருக்குமான தண்டனை புத்தாண்டில் அறிவிக்கப்பட்டும் என்றே கூறப்படுகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *