அவரை நான்தான் திமுக கூட்டணிக்கு போக சொன்னேன் – உண்மையை உடைத்த சீமான்

அவரை நான்தான் திமுக கூட்டணிக்கு போக சொன்னேன் – உண்மையை உடைத்த சீமான்


இஸ்லாமியர்கள் 6வது கடமையாக திமுகவிற்கு வாக்களிக்கிறார்கள் என சீமான் பேசியுள்ளார்.



சீமான்



திருச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ‘அண்ணனுடன் ஆயிரம் பேர்’ சந்திப்பு என்ற நிகழ்வு நடைபெற்றது.

seeman



இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 



இஸ்லாமியர்கள் வாக்கு



அதில் பேசிய அவர், திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த ஐபோனை தர மறுப்பது நியாயமற்றது. ஐபோனில் முருகன் யாருடன் பேச போகிறார்? கோயில் உண்டியலில் வெடிகுண்டு விழுந்தால் என்ன செய்வார்கள்? என கேள்வி எழுப்பினார்.



இஸ்லாமியர் ஓட்டுக்களை பெறுவதற்காகவே நாங்கள் பாட்ஷாவிற்கு ஆதரவாக பேசுகிறோம் என்று அண்ணாமலை கூறுகிறார். அவர் யாருடைய ஓட்டை பொறுக்குவதற்காக கோயம்புத்தூரில் பேரணி நடத்தினார்? இஸ்லாமியர்கள் எனக்கு இதுவரை வாக்களித்தது இல்லை. அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்காக நான் அவர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லை. 

seeman



இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் 6ஆவது கடமையாக திமுகவுக்கு வாக்களிப்பதை வைத்துள்ளார்கள். இறைதூதரே வந்து சீமானுக்கு ஓட்டு போடுங்கள், திமுகவுக்கு போடாதீங்கன்னு சொன்னா கூட , இந்த மக்கள் “நீங்கள் இறைதூதரே இல்லை”னுதான் சொல்வாங்க. ஏஏனென்றால் நான் பாஜகவோட பி டீமாம். அப்போ ஏ டீம் யாரு, திமுகதானே.



திமுக கூட்டணி



20 வருடங்களாக கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து நாம் கட்சியை சார்ந்தவர்கள் தடுத்து வருகின்றனர். என்னுடைய வளங்களை வெட்டி எடுத்து அவர்களின் குப்பைகளை கொட்டுகின்றனர். கேரளா கடவுளின் தேசம் என்றால் தமிழ்நாடு கண்றாவி தேசமா?



கூட்டணியை விரும்புபவர்கள் எதற்காக தனித்தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும். வேல்முருகன் என்னை தொலைபேசியில் அழைத்து டிடிவி தினகரனுடன் இணையவா என கேட்டார். அவருக்கு எம்எல்ஏ ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. அதற்கு திமுகவிடமே செல்லலாம் என நான்தான் கூறினேன்” என தெரிவித்துள்ளார்.   


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *