பவிஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்

பவிஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்


சென்னை,

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவிஷ். இவர் தனுஷின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பவிஷ், அடுத்தடுத்த மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் லஷ்மணிடம் ‘போகன்’ மற்றும் ‘பூமி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் மற்றும் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாகா துர்கா கதாநாயகியாக நடிக்கிறார். காதல் கலந்த கமர்ஷியல் கதைக்களத்தில் உருவாகி இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் துவங்கியது.

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படத்தின் டைட்டிலை நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இன்று மாலை 5 மணியளவில் வெளியிட உள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *