இயக்குநர் திட்டியதால் அழுத கீர்த்தி சுரேஷ்.. நடிகை பகிர்ந்த சம்பவம்

இயக்குநர் திட்டியதால் அழுத கீர்த்தி சுரேஷ்.. நடிகை பகிர்ந்த சம்பவம்

கீர்த்தி சுரேஷ்

முன்னணி நடிகையாக தென்னிந்திய அளவில் வலம் வரும் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.

இயக்குநர் திட்டியதால் அழுத கீர்த்தி சுரேஷ்.. நடிகை பகிர்ந்த சம்பவம் | Keerthy Suresh Talk About Incident In First Movie

அடுத்ததாக இவர் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது. அதே போல் ‘அக்கா’ என்கிற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வெப் சீரிஸ் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் திட்டியதால் அழுத கீர்த்தி சுரேஷ்.. நடிகை பகிர்ந்த சம்பவம் | Keerthy Suresh Talk About Incident In First Movie

நடிகை பகிர்ந்த சம்பவம்

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது முதல் படத்தில் நடந்த சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இயக்குநர் திட்டியதால் அழுத கீர்த்தி சுரேஷ்.. நடிகை பகிர்ந்த சம்பவம் | Keerthy Suresh Talk About Incident In First Movie

இதில் “எனது மலையாள திரைப்பட பயணம் கீதாஞ்சலி படத்துடன் தொடங்கியது. இந்த படத்தை இயக்கியவர் பிரியதர்ஷன். அப்போது நடந்த ஒரு சம்பவம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஒரு காட்சியை படமாக்கிய பிறகு, அவர் என்னை திட்டிவிட்டார். என் கண்களில் கண்ணீர் பெருகியது. அது எனது முதல் படம் என்பதால், நான் அழுதேன். அவர் அனைவரையும் ஒரே மாதிரியாகத்தான் பார்ப்பார். அவர் தனது மகள் கல்யாணி பிரியதர்ஷனையும் அப்படிதான் திட்டுவார்” என கூறியுள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *