நடிகை தீப்சிகாவின் ‘ரமணி கல்யாணம்’…டைட்டில் லுக் வெளியீடு|Here is the TITLE LOOK of RAMANIKALYANAM

நடிகை தீப்சிகாவின் ‘ரமணி கல்யாணம்’…டைட்டில் லுக் வெளியீடு|Here is the TITLE LOOK of RAMANIKALYANAM


சென்னை,

விஜய் ஆதிரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தீப்சிகா மற்றும் சூர்யா வசிஷ்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘கோர்ட்” போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய ராம் ஜெகதீஷ், இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், கிரண் அப்பாவரம் மற்றும் பிற பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்கள் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இப்படத்திற்கு ‘ரமணி கல்யாணம்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. ‘வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் காதல் மற்றும் உணர்ச்சிகளின் அழகான பயணமாக இந்தப் படம் இருக்கும்’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *