Rajinikanth honored at Goa International Film Festival of India

கோவாவில், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20 முதல்நவம்பர் 28ம் தேதி வரை நடைபெற்றவுள்ளது. இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கவுரவிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கவுரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிக்கு இந்த கவுரவம் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய திரைப்பட விழாவில், மறைந்த திரைப்பட இயக்குநர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் சலீல் சௌதரி ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.
முன்னதாக, இந்த விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன. விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படமும் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.






