’ஆர்டி76’ பட பாடல்… படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்த டிம்பிள் ஹயாதி|Dimple Hayathi shares BTS pic from RT76 song shoot

’ஆர்டி76’ பட பாடல்… படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்த டிம்பிள் ஹயாதி|Dimple Hayathi shares BTS pic from RT76 song shoot


சென்னை,

‘கிலாடி’ படத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்த டிம்பிள் ஹயாதி, தற்போது ஆர்டி76( RT76) படத்திற்காக மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். கிஷோர் திருமலா இயக்கும் இந்த படத்திற்கு ‘பாரத மகாசஹாயுலகு விக்னாப்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இந்த பாடல் “சூப்பர் டூப்பர் ஹிட்” ஆகப் போகிறது என்று நடிகை டிம்பிள் செட்டில் இருந்து படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் ஆஷிகா ரங்கநாத் முக்கிய கதாநாயகியாக நடிக்கிறார். சுதாகர் செருகுரி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *