சூர்யா படத்தில் இணைந்த “லோகா” பட நடிகர்

சூர்யா  படத்தில் இணைந்த  “லோகா” பட நடிகர்


சூர்யாவின் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ”கருப்பு”. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து தனது 46-வது படத்தின் படப்பிடிப்பில் சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘சூர்யா 47’ படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் சூர்யாவுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதத்தில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

இதில் சூர்யாவுடன் நடிக்க பகத் பாசில், நஸ்ரியா உள்ளிட்டோர் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். அவர்களுடன் நஸ்லினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவர் ‘லோகா’, ‘பிரேமலு’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். அவர் தமிழில் ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக கேரளா எல்லையில் இதன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளது படக்குழு. இப்படத்தில் காவல் துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *