“அப்படியே அப்பா மாதிரி”.. ஜாய் கிரிசில்டாவின் இன்ஸ்டா பதிவு

“அப்படியே அப்பா மாதிரி”.. ஜாய் கிரிசில்டாவின் இன்ஸ்டா பதிவு


சென்னை,

சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில், ஜாய் கிரிசில்டா தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் குழந்தையின் முகம் மறைக்கப்பட்டிருந்த நிலையில், அதில்,”கார்பன்காபி ஆப் ஹிஸ் பார்தர் பேஸ்” என குறிப்பிட்டுள்ளார். அதாவது, அப்பாவின் முக ஜாடையை அப்படியே உரித்து வைத்திருப்பதாக ஜாய் கிரிசில்டா குறிப்பிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *