Director Arun Matheswaran and Lokesh Kanagaraj’s ‘DC’ film Title teaser out| அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ படத்தின் டைட்டில் டீஸர் லோகேஷ் கனகராஜ்

Director Arun Matheswaran and Lokesh Kanagaraj’s ‘DC’ film Title teaser out| அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ படத்தின் டைட்டில் டீஸர் லோகேஷ் கனகராஜ்


சென்னை,

‘மாநகரம்’ படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து ‘கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. தற்போது ரஜினியை வைத்து ‘கூலி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும், கைதி 2, விக்ரம் 2 ஆகிய படங்களை இயக்க உள்ளார். இது தவிர தனது ஜிஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கிறார். இந்த புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. டிசி படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவித்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *