தமிழில் தொடர்ச்சியாக நடிக்க மறுப்பது ஏன்?- நடிகை அஞ்சு குரியன் சொன்ன பதில் | Why do you refuse to act in Tamil continuously?

தமிழில் தொடர்ச்சியாக நடிக்க மறுப்பது ஏன்?- நடிகை அஞ்சு குரியன் சொன்ன பதில் | Why do you refuse to act in Tamil continuously?


சென்னை,

‘நேரம்’, ‘சென்னை டூ சிங்கப்பூர்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஓஹோ எந்தன் பேபி’ போன்ற படங்களில் நடித்த அஞ்சு குரியன், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார்.அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டும் ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகிறார். அஞ்சு குரியன் நடிப்பில் விரைவில் ‘அதர்ஸ்’ என்ற தமிழ் படம் அடுத்த வாரம் வெளியாகிறது.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அஞ்சு குரியனிடம், ‘தமிழில் தொடர்ச்சியாக நடிக்க மறுப்பது ஏன்?’, என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘‘தமிழ் சினிமாவில் நடிக்க யாருக்குத்தான் பிடிக்காது. எனக்கு மிகுதியாக அந்த ஆசை உண்டு.

தகுந்த கதைக்காக காத்திருந்தேன். அது நடந்தது. இனி தமிழில் தொடர்ச்சியாக நடிக்க திட்டமிட்டுள்ளேன். ரசிகர்கள் என்மீது கொண்ட அன்புக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்”, என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *