மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் … மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிராக மனு தாக்கல் செய்த ஜாய் கிரிசில்டா

மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் … மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிராக மனு தாக்கல் செய்த ஜாய் கிரிசில்டா


சென்னை,

பிரபலங்களின் வீட்டு சமையல் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் என சொல்லும் அளவுக்கு பிரபலமடைந்தவர் ரங்கராஜ். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே, ஆடை வடிவமைப்புக் கலைஞர் ஜாய் கிரிசில்டாவை சட்டத்திற்கு புறம்பாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இப்போது ஜாய்கிரிசில்டா நிறைமாத கர்ப்பிணியாகவும் உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஜாய்கிரிசில்டா தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு வருகிறது. இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா மாறி மாறி தங்களின் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டார்கள்.

இந்நிலையில் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தான் நிறைமாத கர்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை என்பதாலும், தற்போது தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும், 7 மாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

View this post on Instagram

A post shared by J Joy (@joycrizildaa)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *