ரூ.100 கோடி வசூலித்த முதல் அசாம் படம்…சாதனை படைக்குமா ஜுபீன் கார்க்கின் கடைசி படம்?|Zubeen Garg’s Final Film Set To Break Box Office Records

ரூ.100 கோடி வசூலித்த முதல் அசாம் படம்…சாதனை படைக்குமா ஜுபீன் கார்க்கின் கடைசி படம்?|Zubeen Garg’s Final Film Set To Break Box Office Records


சென்னை,

மறைந்த அசாம் இசையமைப்பாளர் ஜுபின் கர்க் முக்கிய வேடத்தில் நடித்த அவரது கடைசி படமான ‘ரோய் ரோய் பினாலே’, ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்து வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் வருகிற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முன்பதிவு துவங்கி ஒரு மணி நேரத்திற்குள் 15,000 டிக்கெட்டுகள் விற்றுள்ளன. மேலும் புக் மை ஷோவில் 50,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அசாமிய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக, ரோய் ரோய் பினாலே ரூ.100 கோடி வசூலைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததைத் தவிர, ஜுபின் இந்தப் படத்திற்கு இசையமைத்து, தயாரித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கப்பூரில் நீரில் மூழ்கி ஜுபின் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *