ஆண்கள் எல்லோரும் பாவம் என்று சொல்ல மாட்டேன்- மாளவிகா மனோஜ் | I won’t say that all men are sinful

ஆண்கள் எல்லோரும் பாவம் என்று சொல்ல மாட்டேன்- மாளவிகா மனோஜ் | I won’t say that all men are sinful


சென்னை,

கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரியோராஜ் – மாளவிகா மனோஜ் நடிப்பில் தயாராகியுள்ள `ஆண் பாவம் பொல்லாதது’ படம் வருகிற 31-ந்தேதி திரைக்கு வருகிறது.

இதையொட்டி நடந்த படத்தின் புரமோஷன் விழாவில், மாளவிகா மனோஜ் பேசியபோது, ” ரியோராஜ் ஜோடியாக மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. இது ஆண்களின் பக்கம் நின்று பேசும் கதை என்றாலும், பெண்களுக்கும் சில தேவையான தகவல்களை இந்த கதை சொல்லும். அதனால்தான் இந்த கதையை ரசித்து செய்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை ஆண்கள் எல்லோரும் பாவம் என்று சொல்ல மாட்டேன்.

ஒரு சில ஆண்களை மட்டும் வேண்டுமென்றால் பாவம் என்று சொல்லலாம். மற்றபடி இன்றைய தலை முறைக்கு தேவையான பல சுவாரஸ்ய தகவல்கள் படத்தில் உள்ளன. ரசிப்புக்கு குறைவு இருக்காது”, இவ்வாறு அவர் பேசினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *