Music composer G.V. Prakash congratulates Karthika for winning gold in Kabaddi

Music composer G.V. Prakash congratulates Karthika for winning gold in Kabaddi


3-வது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி பக்ரைன் நாட்டில் நடந்து வருகிறது. இதில் கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்திய மகளிர் அணி இறுதி ஆட்டத்தில் ஈரானை தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

இந்நிலையில், ஆசிய இளையோர் விளையாட்டு கபடியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் “ஜெயில் படப்பிடிப்பின்போது கண்ணகி நகர் சகோதர சகோதரிகளின் அபாரமான விளையாட்டுத் திறனை கண்டு வியந்தேன். இன்று உலகமும் வியக்கிறது. அன்புத் தங்கை கார்த்திகா நம் தேசத்தின் பெருமை. மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்.” என்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *