’சின்ன வயதில் இருந்தே ஒரு கெட்ட பழக்கம் இருக்கு’…வைரலாகும் ’ஸ்பிரிட்’ படத்தின் வீடியோ|’I have a bad habit since I was a child’…Video from the movie ‘Spirit’ goes viral

’சின்ன வயதில் இருந்தே ஒரு கெட்ட பழக்கம் இருக்கு’…வைரலாகும் ’ஸ்பிரிட்’ படத்தின் வீடியோ|’I have a bad habit since I was a child’…Video from the movie ‘Spirit’ goes viral


சென்னை,

பிரபாஸ், தற்போது ‘தி ராஜா சாப்’ மற்றும் ‘பவுஜி’ ஆகிய படங்களில் மும்முரமாக உள்ளார். இவை தவிர, இன்னும் பல படங்கள் அவர் கைவசம் உள்ளன. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படமும் அதில் ஒன்று.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திரிப்தி திம்ரி கதாநாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படக்குழு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில், பிரபாஸ் ’சின்ன வயதில் இருந்தே எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு’ என்று கூறும் வசனம் இடம்பெற்றுள்ளது. மேலும், பிரகாஷ் ராஜ், விபேக் ஓபராய் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *