திண்ணைல கிடந்தவனுக்கு வந்த வாழ்க்கை.. நடிகர் சூரி தன்னை விமர்சித்தவருக்கு கூலான பதில்

நடிகர் சூரி காமெடியனாக நடிக்க தொடங்கி தற்போது கோலிவுட்டில் ஹீரோவாகவும் படங்கள் நடித்து வருகிறார்.
அவர் சமீபத்தில் தீபாவளி கொண்டாடிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அவர் வீட்டை பார்த்துவிட்டு நெட்டிசன் ஒருவர் “திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை” என விமர்சித்து இருக்கிறார்.
சூரி கூலான பதிலடி
அந்த நபருக்கு சூரி கூலாக பதில் கொடுத்து இருக்கிறார்.
“திண்ணையில் இல்லை நண்பா 🙏 பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்” என அந்த நபருக்கு பதிலடியோடு அட்வைஸும் கூறி இருக்கிறார்.