I will express Periyar’s views in the language of cinema – “Dude” director | பெரியார் கருத்துகளை சினிமா மொழியில் சொல்வேன்

I will express Periyar’s views in the language of cinema – “Dude” director | பெரியார் கருத்துகளை சினிமா மொழியில் சொல்வேன்


சென்னை,

தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் டிராகன் படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.

கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்தில் பிரதீப் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘டியூட்’ படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி கலந்த படமாக இப்படம் கடந்த 17ம் தேதி வெளியானது.

டியூட் படத்தில் நடித்த படப்பிடிப்பு காட்சிகளை பிரதீப் ரங்கநாதன் வீடியோவாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘டியூட்’ திரைப்படம், 5 நாட்களில் ரூ. 95 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

‘டியூட்’ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், “படத்தின் இறுதியில் ஒரு வசனம் இடம் பெற்றிருக்கும். அதில், ‘உங்க ஆணவத்திற்கு கொலை செய்வீர்களா? அவ்வளவு ஆணவம் இருந்தால், நீங்கள் போய் சாக வேண்டியதுதானே!’ என்று கேட்கப்பட்டிருக்கும். உண்மையில் படத்தில் இப்படியான டயலாக்குகள் தொடக்கத்தில் இடம் பெறவில்லை. ஆனால், படம் தயாராகிக் கொண்டிருந்த போதுதான் திருநெல்வேலி கவின் படுகொலை சம்பவம் நடந்தது. ஆணவ படுகொலைக்கு எதிராக சினிமா வழியில் எதையாவது தெரிவிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. எனவேதான் அந்த டயலாக் திரைப்படத்தில் இடம் பெற்று இருந்தது. இந்த திரைப்படம் விரைவில் ரூ.100 கோடி வசூலை எட்ட இருக்கிறது. அதுவே திரைப்படத்திற்கு எவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதற்கான சான்று.

இந்த திரைப்படம் பல விவாதங்களை கிளப்பி இருப்பதாகவும், பலர் பேசாத விஷயங்கள் இப்படத்தில் பேசப்பட்டிருப்பதாகவும், பலரும் கூறுகிறார்கள். இது தமிழ்நாடு. இங்கு நிறைய பெரியவர்கள் இருந்திருக்கிறார்கள். அதில் பெரியாரும் ஒருவர். இவர்களெல்லாம் சொல்லாத கருத்தை நாங்கள் சொல்லவில்லை. அவர்களின் வழியில்தான் சென்று கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்று கருத்துக்கள் தமிழ்நாட்டுக்கு புதியது அல்ல. ஆனால், அதை சினிமா மொழியில் பார்வையாளர்களுக்கு கடத்துவதுதான் என்னுடைய ஆசை” என்று கூறியிருக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *