அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் வரும் Item பாடலுக்காக பூஜா ஹெக்டே வாங்கும் சம்பளம்… 5 நிமிடத்திற்கு இத்தனை கோடியா?

அல்லு அர்ஜுன்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன்.
இவரது நடிப்பில் கடைசியாக புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி இருந்தது, படம் வசூல் வேட்டை தொடங்கும் முன்பே உயிரிழப்பு ஏற்பட அதனால் அல்லு அர்ஜுன் கைது எல்லாம் செய்யப்பட்டார், இந்த விஷயங்கள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது அந்த பட வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அட்லீ-அல்லு அர்ஜுன் இணையப்போகும் படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
Item பாடல்
பெரிய நடிகர்களின் படங்களில் ஒரு பாடலுக்கு நடிகை நடனம் ஆடுவது டிரண்டாகிவிட்டது.
அப்படி படங்களில் இடம்பெறும் Item பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல ரீச் உள்ளது. தற்போது என்ன தகவல் என்றால் அல்லு அர்ஜுன்-அட்லீ இணையும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளாராம் பூஜா ஹெக்டே.
5 நிமிட பாடலுக்காக மட்டுமே அவர் ரூ. 5 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.